என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாகிஸ்தான் போர் விமானம்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் போர் விமானம்"
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராக பரவியது. அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கணவனின் கடமையும்
தந்தையின் வீரமும்,
மனைவியின் மனதையும்
மகனின் கண்களையும்,
ஈரப்படுத்தாமல்
சேதப்படுத்தாமல்
எத்தனை நிமிடங்கள்
காக்கும்?
அதற்குள் காக்குமா
இந்தியா அந்த வீரத்
திருமகனை?
இவ்வாறு கூறியிருக்கிறார். #Abhinandan #BringBackAbhinandan #Parthiban
பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் இன்று சுட்டு வீழ்த்தியதாக கூறும் இந்திய போர் விமானத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய இந்திய வீரர் அபினந்தன் வர்தமானிடம் அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கையில் ஒரு குவளையில் உள்ள தேனீரை பருகியவாறு அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிமான பதில்களை அவர் தவிர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நான் இந்திய விமானப்படையை சேர்ந்த ‘விங் கமாண்டர்’ அபினந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
எங்களுடன் இப்போது இருப்பதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்று ஒரு அதிகாரி அபினந்தனை கேட்கிறார்.
‘நான் இது தொடர்பாக என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டது முதல் இப்போதுவரை அவர்கள் என்னை நன்றாக நடத்தி வருகின்றனர்.
என்னுடைய தாய்நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகும் இந்த கருத்தை நான் மாற்றி தெரிவிக்க மாட்டேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகவும் கண்ணியான (ஜென்ட்டில்மேன் மேன்) முறையில் என்னை நடத்தினார்கள். அவர்கள் ராணுவத்தினர் இந்தியாவிடம் பிடிபட்டாலும் இதேபோல் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என அபினந்தன் பதிலளிக்கிறார்.
இந்தியாவில் நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற கேள்விக்கு, ‘நான் இதை உங்களிடம் தெரிவிக்க கூடாது. என்றாலும், இந்தியாவின் தென்கோடி பகுதியை சேர்ந்தவன்’ என்கிறார். நீங்கள் திருமணமானவரா? என்னும் கேள்விக்கு ‘ஆம்’ என்கிறார். தேனீர் எப்படி உள்ளது? என்பதற்கு மிக அருமையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.
‘நீங்கள் எந்தவகை போர் விமானத்தில் பறந்து வந்தீர்கள்? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளிப்பதை தவிர்க்கும் அபினந்தன், ‘மன்னிக்கவும் எரிந்து விழுந்த விமானத்தின் சிதிலங்களை கொண்டு நீங்களே யூகித்துக் கொள்ளலாம்’ என்று சாதுரியமாக கூறுகிறார்.
போர் விமானத்தில் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்கான முக்கிய நோக்கம் என்ன? என்னும் கடைசி கேள்விக்கு ‘மன்னிக்க வேண்டும். இதற்கு நான் உங்களுக்கு பதிலளிக்க இயலாது’ என துணிச்சலாக அபினந்தன் பதில் கூறும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation #IAFpilotAbhinandan #BringBackAbhinandan
ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் வீடியோவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் அபினந்தன் முகத்தில் ரத்த காயங்களுடன் காணப்படுகிறார்.
இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள சிலர் அபினந்தன் காட்டருவியில் விழுந்து கிடந்த நிலையில் அவர் கைது செய்யப்படும் காட்சி, படுத்த நிலையில் அவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்படும்காட்சி, அவரை சில அதிகாரிகள் மாறிமாறி முகத்தில் தாக்கப்படும் காட்சி மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் அபினந்தன் தோன்றும் காட்சி ஆகிய காட்சிகள் கொண்ட சில வீடியோக்களை சமூக வலைத்தளத்தங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட கூடாது. அவர் விரைவில் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த நிலையில் செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள பாராளுமன்ற நூலக அரங்கில் இன்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதற்கு பதிலடியாகவும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
பாகிஸ்தான் மிரட்டலை தொடர்ந்து இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள சில விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. #airportsOperations #Operationsresumed
புதுடெல்லி:
இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நேற்று நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் இன்று காலையில் இருந்து விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மற்றும் சிம்லா உள்ளிட்ட விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
டெல்லிக்கு வடக்கில் உள்ள வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. #airportsOperations #Operationsresumed
தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. #PakistanFlightShot
ஸ்ரீநகர்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது, அதில் இருந்த பைலட் பாராசூட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. #PakistanFlightShot
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது, அதில் இருந்த பைலட் பாராசூட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. #PakistanFlightShot
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X